Thursday, January 24, 2008

இம்மைக்கும் மறுமைக்கும் இடைபட்ட பர்ஸக் வாழ்வு

இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட பர்ஸக் வாழ்வு!

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கேனும் மரணம் வந்து விட்டாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்பி விடு. நான் விட்டு வந்து அ(ந்த உலகத்)தில் (இனிமேல்) நற்காரியங்களையே செய்து கொண்டிருப்பேன் என்று கூறுவான். (எனினும் அது நடக்கக் கூடிய காரியம்.) அன்று (இத்தகைய சந்தர்ப்பத்தில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (அன்றி வேறில்லை) அவர்களுக்கு முன் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் ஒரு பர்ஸக் உண்டு. (23:99,100)

ஒரு அடியான் கப்ரினுள் வைக்கப்பட்ட பின் அவனுடைய தோழர்கள் திரும்பி வருகின்ற போது அவர்களுடைய பாதணிகளின் சப்தத்தைக் கூட அவன் செவியுறுவான். அப்போது அவனிடம் இரண்ட மலக்குகள் வந்து (பல கேள்விகள் கேட்பார்கள். அதன் தொடரில் நபி (ஸல்) அவர்களைக் குறித்து) இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்? என்று கேட்பார்கள். ஒரு மூமினைப் பொறுத்த வரையில் அக்கேள்விக்கு ‘அவர் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள். என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அவனை நோக்கி ‘நரகில் உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப்பார் அவ்விடத்துக்குப் பகரமாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படுகிறது’ என்று கூறப்படும். அப்பொழுது (சுவர்க்கம், நரகம் ஆகிய) அவ்விரண்டையும் அவன் காண்பான்.

முனாபிக், காபிர் இருவரையும் நோக்கி (நபி (ஸல்) அவர்களைக் குறித்து இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய் என் கேட்கப்படும். ‘அவரைப் பற்றி மக்கள் ஏதேதோ சொல்லுவதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் (அது என்னவென்று இப்பொழுது) எனக்குத் தெரியாது, நான் அது பற்றி அறியவுமில்லை’ என்று கூறுவான்.

அப்பொழுது அவன் இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவான். ஒவ்வொரு அடியின் போதும் அவன் எழுப்புகின்ற ஓசையை மனிதனையும், ஜின்களையும் தவிர (பூமியிலுள்ள) எல்லா உயிரினனங்களும், செவிமடுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி)