Tuesday, January 15, 2008

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்

இஸ்லாமியர்களுக்கு என்று அல்லாஹ் அனுமதித்த மற்றும் அல்லாஹ்வின் ரசூல் முகம்மது (ஸல்) அவர்கள்காட்டி தந்த இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாமிய பெருமக்களுக்கு கொண்டாடபட வேண்டிய பெருநாட்கள்ஆகும். 1. அரபி மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து அந்த நோன்புகளை முடித்த பிறகு ஷவ்வால் என்ற அரபி மாதத்தில் முதல் தேதி அன்று கொண்டாடபடும் பண்டிகை. 2. துல்ஹஜ் என்ற அரபி மாதத்தில் பிறைகள் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கொண்டாடபடும் ஹஜ் பண்டிகைகள் ஆகும்.

இந்த நாட்களில் மட்டும் நோன்புகள் நோற்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தும் இருக்கிறார்கள்.இந்த நாட்களில் இறை வணக்கம் செலுத்திவிட்டு, வயிறாற சாப்பிட்டும், உணவில்லாதவர்களுக்கு உணவுகள்கொடுத்தும், பண உதவிகள் செய்தும், தான தர்மங்கள் செய்தும், புத்தாடை உடுத்தியும் மிகவும் சிறப்பாககொண்டாட சொல்லி தந்திருக்கிறார்கள் நமது இறை தூதர் அவர்கள்.

ரமலான் மாத பிறைக்கு முன்னால் சுன்னத்தான (உபரியான) நோன்பு நோற்பவர்கள் ஷாபான் பிறை 15-க்குபிறகு நோன்பு நோற்பதை நிறுத்தி கொள்ளவும் முகம்மது (ஸல்) அவர்கள் சொல்லி தந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் படைத்த நாட்களில் எல்லா நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இந்த நாள்தான் நல்ல நாள், இந்த நாள்தான்கெட்ட நாள் என்று எந்த ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனும் சொல்லிவிட கூடாது என்று சொல்கிறது இஸ்லாம்.ஆம் நண்பர்களே, ஒவ்வொரு நாளும் உலகில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தேதான் நடந்து கொண்டிருக்கின்றன.இன்று ஒரு இடத்தில் குழந்தைகள் பிறக்கின்றன, இன்னொரு இடத்தில் இறக்கின்றன. ஒருவருக்கு திருமணம்நடைபெறும், இன்னொருவருக்கு விபத்து நடைபெறும். ஒரு இடத்தில் வெப்பம், சூடு என்று வெயில் கொழுத்தும்.இன்னொரு இடத்தில் பனி, மழை, தென்றல், புயல், பூகம்பம் என்று இப்படி இடத்திற்கு இடம் மாறுபடுதலும் உண்டு.ஆகவே இறைவன் படைத்த நாட்களில் எந்த ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து இதுதான் நல்ல நாள் என்றுசொல்லுதல் கூடாது.

அரபி மாதத்தின் முதல் மாதமான முஹரம் என்ற மாதம் இது. இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் ப்ரவுன்என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள்தான் இந்த மாதத்தின் பிறை 10-ஆம் நாள் ஆகும். முஹம்மது (ஸல்) அவர்கள்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இந்த மாதத்தின் 10-ஆம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். அவர்களைகண்ட நபிகள் பெருமானார் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள் என்று வினாவினார்கள். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ப்ரவுனை வெற்றி பெற்ற இந்த நாளை நாங்கள் நன்றி சொல்லும் விதமாக நோன்புநோற்று வருகிறோம் என்றும் சொன்னார்கள். அப்பொழுதுதான் நபி (ஸல்) சொன்னார்கள், மூஸா (அலை)அவர்கள் வெற்றி பெற்ற இந்த நாளுக்கு நன்றி சொல்வதற்க்கு உங்களைவிட நாங்களே சிறந்தவர்கள் என்றுகூறிவிட்டு, அன்றைய தினத்திலிருந்து இஸ்லாமியர்களை முஹரம் 10-ஆம் நாள் நோன்பு நோற்க சொல்லிதந்தார் நமது நபி அவர்கள்.

ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்திஇருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை.இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்)

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த இந்த நோன்பைதான் ஆஷூரா நோன்பு என்று அழைக்கிறோம். முஹர்ரம்மாதத்தின் பிறை 9,10 அல்லது 10,11 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஒரு வருடகால பாவங்களை மன்னிப்பான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த இரண்டு தினங்களும் நோன்பு நோற்று, இந்த சுன்னத்தான வழிமுறையைபின் பற்றுவோம், அல்லாஹ் நமது ஒரு வருட கால குறைகளையும், பாவங்களையும் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் நா, அனைவரும் பிராத்திப்போம். நான் எழுதியவற்றில் ஏதும் குறை இருப்பின்எனக்கு அந்த குறையை சுட்டி காட்டுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.