Saturday, January 12, 2008

கடவுள் நம்பிக்கை (4)

பல ஏழை குடும்பங்களில் படிக்க முடியாத எத்தனையோ சிறுவர்கள் படிப்பை பாதியிலேயேநிறுத்த கூடிய செயலும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக எப்படி வளர்கிறார்கள் என்பதனை பார்ப்போம். பண வசதி இல்லாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் இவர்கள், சிறு வயதிலேயே பெட்டி கடை அல்லது ஏதோ தீப்பெட்டி தொழிற்சாலைகள் அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் கொண்டு போய் தனது பிள்ளைகளை சேர்க்க கூடியவர்களாக இருக்கின்றனர்.இந்த குழந்தைகள் மிகவும் வறுமையிலேயே வளர கூடிய ஒரு சூழ்நிலையும் ஏற்படுகிறது. இவர்கள் யாரும் எவருக்கும் உதவுவது இல்லை.

கல்வி அறிவு இல்லாத இப்பிள்ளைகள் சிறு வயதிலேயே விளையாட்டாக பொய் பேசி வளர்கின்றனர். இந்தஏழை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இவர்களின் சம்பாத்தியம் மட்டுமே போதும், இவர்களின் வளர்ச்சியில்பெரிய அக்கரை காட்டுவதில்லை. பொய் சொல்லி வளரும் இது மாதிரி குழந்தைகள், சிறு வயதிலேயே தந்தையின்சட்டை பையில் பணத்தை திருட ஆரம்பித்து, பிறகு பிக்பாக்கெட், வழிப்பறி கொள்ளை, தெருக்களில், ஊர்களில்பெரிய ரவுடிகள், தாதாக்கள், கொலையாளிகளாக வளர்கின்றனர். இது எனது கற்பனையில் உதித்த எண்ணங்கள்இல்லை, இன்றைய காவல் துறையில் இருக்கும் குற்றவாளிகளை சென்று ஆய்வு நடத்தினால் தெரியும், அவர்கள்இப்படிதான் படிபடிப்பான தவறுகளில் முன்னேறி இருப்பார்கள் என்பது நன்கு விளங்கும்.

இவர்கள் எல்லாம் கடவுளை எப்படி சிந்திப்பார்கள்? இவர்களால் அப்படி எல்லாம் சிந்திக்கவும் முடியாது.சும்மா பெயருக்கு கோவில், ஆலயங்களுக்கு செல்வதும், அங்கே கிடைக்கும் திருநீறு, குங்குமம், தீர்த்தம் அல்லது தர்ஹாக்களில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் பூ, சந்தனம் இவற்றை எல்லாம் எடுத்து பூசி கொள்வதும், அதை உண்பதும், குடிப்பதும், இதை எல்லாம் செய்தாலே போதும், இவர்கள் புனிதமாகிவிட்டதாக ஒரு நினைப்பு உண்டு. கடவுளை வணங்குவதற்கு என்று இவர்களுக்கு என்றே ஒரு காலத்தை நிர்ணயம் செய்து கொள்வர். வாரம்ஒரு முறை ஆலயம் சென்று கடவுளை வணங்கினால் போதும், வீட்டின் சுவரில் கடவுளின் படங்களை மாட்டி கொண்டு அதை வணங்கினாலே போதும். மரணித்தவர்களின் படங்களையும் சேர்த்து சுவற்றில் மாற்றி வணங்குவது, இதெல்லாம் கடவுள் நம்பிக்கையா?

இந்த கடவுள் நம்பிக்கை இல்லாத மக்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பொய் சொல்லுவது, கடைகளில்திருடுவது, தான் ஒரு சொந்த தொழில் அல்லது தொழிற்சாலை வைத்திருந்தால் அதில் அந்த பொருட்களில் கலப்படம்செய்வது, நிறுவை அளவில் (எடையில்) கோளாறுகள் செய்வது, தான் பழகும் மக்களிடம் நடிப்பாக பழகுவது,அதாவது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது, கோலி சொல்லுவது, கழகம் மூட்டுவது இவர்களின் பட்டியல் ஒரு பக்கம் நீண்டு கொண்டே போகும்.

அடுத்து ஒரு வகை இருக்கின்றனர். இவர்கள் எப்படி என்றால், இவர்கள் இயற்கையாகவே கொஞ்சம் நல்லவர்கள்.இவர்கள் கடவுள் இருக்காரோ அல்லது இல்லையோ, தனது மனசாட்சி என்று ஒரு வடிவத்தை தனக்குள்ஏற்படுத்தி கொண்டு, அவர்கள் செய்யும் கூலி வேலையிலிருந்து, அலுவலக வேலை வரைக்கும், தான்எந்த தவறையும் செய்துவிட கூடாது, அப்படியே ஏதேனும் சிறு சிறு தவறுகள் செய்து விட்டாலும், இவர்களால்நிம்மதியாக சாப்பிட முடியாது, உறங்க முடியாது. இது போன்ற மக்களும் இந்த உலகில் சிலர் வாழ்கிறார்கள்.இவர்களிடம் கொஞ்சம் அன்பு, இரக்கம், மனிதம் எல்லாம் இருக்கும். இவர்கள் மற்றவர்களை மதிக்க கூடியவர்கள்.ஆனால் எந்த வம்பு, சண்டைக்கும் போக மாட்டார்கள். இவர்கள் உண்டு, இவர்களின் வேலை உண்டு என்றுஇருப்பார்கள். இது போன்ற நல்லவர்களும் ஒரு வகையினர் இந்த உலகில் உண்டு.

(தொடரும்)