Wednesday, January 16, 2008

இஸ்லாத்தில் இல்லாத சடங்குகள்

இஸ்லாத்தில் இல்லாத பழக்கங்கள் அல்லது சடங்குகள் அல்லது பண்டிகைகள் :

அல்லாஹ்வின் வேதமான குரானும் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டி தந்தவழி முறையும் ஆகியவை மட்டுமே இஸ்லாம் ஆகும். இவைகள் இரண்டும் மட்டுமே இஸ்லாம். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு சொல்ல வேண்டுமென்றால் குரான் மற்றும் ஹதீஸ்களை படித்து, தெளிவு பெற்று, தீர்ப்பு சொல்லிவிடலாம். இது போன்ற எளிய முறையை, உண்மையான முறையை வேறு எந்த ஒரு மதத்திலும் அல்லது வேதத்திலோ காணமுடியாது. இதுவும் இஸ்லாத்தின் தனி சிறப்புகளில் ஒன்று.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை நான் சென்ற பதிவில் சொல்லி இருந்தேன். அதை தவிர முகர்ரம் மாதத்திற்கு வேறு என்ன சிறப்பு இருக்கிறது என்று தேடினால் நமக்கு ஆதார பூர்வமான குரான், ஹதீஸ்விளக்கங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை.

இந்த மாதத்தில் நடந்த மற்றொரு நிகழ்வு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேர குழந்தைகளான ஹசன், ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்டதும் இந்த முஹர்ரம் 10-ஆம் நாள்தான்.உண்மையில் அது ஒரு சோகமான நிகழ்வுதான், வருத்தபட கூடிய நிகழ்வுதான். இந்த ஒரு நிகழ்வைசென்ற பதிவில் நான் சொல்லாமல் விட்டுவிட்ட ஒரு விசயம் ஆகும்.

மூஸா (அலை) அவர்களுக்கான வெற்றியை நினைவில் கொண்டு, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும்வகையில் நாம் இந்த முஹர்ரம் மாதத்தின், இந்த குறிப்பிட்ட நாட்களை கண்ணியபடுத்த வேண்டுமே தவிர,வேற எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்த மாதத்தில் வேறு எந்தவிதமான சடங்குகள் செய்வதற்கு அல்லாஹ்தனது திருமறையிலோ அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையிலோ இல்லை என்பது மிகவும் குறிப்பிடதக்கது.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? பிற மதத்தவரிடமிருந்து கற்று கொண்ட புத்தாண்டு வாழ்த்துக்கள்,முஹர்ரம் அரபி மாதத்தின் முதல் மாதமாம், ஆதலால் ஒருவொருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைபரிமாறி கொள்கின்றனர். இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு வழிமுறையாகும், இதனால் பெரிசாக ஏதும்நல்லது நடந்துவிட போவது இல்லை. மாறாக கெடுதலே, இஸ்லாத்தில் இல்லாத ஒரு வழிமுறையை கொண்டு வந்து நுழைப்பது வது வழிகேட்டில் கொண்டு போய் முடியும் என்று நபி (ஸல்) அவர்கள்கற்று தந்திருக்கிறார்கள்.

இன்னும் இவர்கள் ஹசன், ஹூசைன் அவர்கள் இருவரும் கொல்லபட்ட துக்க செய்தியை ஒரு விதமான பாவனைகளில்கொண்டாடி வருகின்றனர். இது எதை அடிப்படையாக வைத்து இப்படி செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை.நமது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மார்க்கத்தை முழுமை படுத்திவிட்டேன் என்று அறிவித்ததும், அல்லாஹ்அதை குரானில் குறிப்பிட்டு இருப்பதும் மிகவும் குறிப்பிடதக்கது. நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு ஏற்பட்டஎந்த நிகழ்வுகளும் இஸ்லாம் ஆகிவிடாது என்பது எல்லோரும் ஒப்பு கொள்ளும் விசயம். நபி (ஸல்)அவர்களுக்கு பிறகு நபி அல்லாத மனிதர்களால் ஏற்படும் நிகழ்வுகளை இஸ்லாத்தில் நுழைப்பதும்பெரும் பாவமாகும். இதை பிததத் என்று சொல்வார்கள்.

இஸ்லாத்தை பொருத்தவரைக்கும் எந்த ஒரு நபர், நமக்கு நெருங்கிய நபர், நமது குடும்பத்தில் மிகவும் நெருக்கமானநபர் இறந்துவிட்டாலும் மூன்று நாட்கள் மட்டுமே துக்கம் அனுஷ்டிக்கபட வேண்டும் என்று இஸ்லாம்நமக்கு சொல்லி தருகிறது. அப்படி இருக்கையில் 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த இருவருக்காகமட்டும் ஏன் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் இவர்கள் (குறிப்பாக ஷியா என்று சொல்லபடும் இவர்கள்), இன்னும் எந்த ஒரு மனிதனும் தன் உறுப்புகளை சிதைத்து கொள்ள கூடாது என்று இஸ்லாம் சொல்லி தந்திருக்கிறது ஆனால் இவர்கள் கத்தியால் தனது உடம்பில் கீறி கொண்டு ஊர்வலம் நடத்தி செல்கிறார்கள்,இது அதிகமாக கண்டிக்கபட வேண்டிய விசயம். மேலும் மற்ற மதங்களில் செய்வது போலவே நெருப்பில்நடந்தும், ஓடியும் ஏதோ ஒன்றை செய்கிறார்கள், எதற்காக அப்படி எல்லாம் செய்ய வேண்டும்? அல்லாஹ் ஒரு போதும் இதை விரும்ப மாட்டான் அல்லது ஏற்க மாட்டான் என்பது இவர்களுக்கு ஏன்தெரியாமல் போனது?

எந்த ஒரு மனிதனையும் அவனுடைய சக்தி மீறி அல்லது அவன் தாங்க முடியாத அளவுக்கு துன்பத்தை இறைவன் ஒரு போதும் தருவதில்லை என்று சொல்கிறான். மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முதியோர் ஒருவர், தனது இரு ஆண் பிள்ளைகளின் தோலில் தொங்கியவாறு (நடக்க முடியாமல்) சொர்ந்து காலை ஊண்டிஊண்டி வருகையில், ரசூல் (ஸல்) அவர்கள் அதை பற்றி வினாவினார்கள். அதற்கு அந்த மனிதரின்பிள்ளைகள் இவர் நடந்தே ஹஜ் செய்ய வேண்டும் என்று நேர்த்தி கடன் செய்து இருக்கிறார் என்று கூறினார்கள்.அதற்கு நபி (ஸல்) அவர்களை கண்டித்து, முதலில் அவரை ஒட்டகத்தில் ஏற்றுமாறு சொல்லி இருக்கிறார்கள்.

அதே போன்று இன்னொரு பெண்மணி இப்படி நேர்த்தி கடன் வைத்து நடந்து வருகையில் அவர்களையும்எச்சரித்ததாக நாம் ஹதீஸ் நூல்களில் காணலாம். கடுமையான வெயில் மற்றும் தொலை தூரம் நடந்து வரும்இதுபோன்ற செயல்களுக்கே நபி அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால், இவர்கள் கத்தியில் கீறிகொண்டும், நெருப்பில் நடந்து கொண்டும், ஏதேதோ வாசகங்களை வாயினால் மொழிந்தும், புதிது, புதிதாகமார்க்கத்தில் நுழைத்த இவர்களுக்கு பாவம் ஒன்றை தவிர வேறு ஏதும் இல்லை என்பதே நமக்கு தெரிகிறது.

இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையில்கூட மலம், ஜலம் கழிக்க அவசரமாக இருந்தால், அதைசெய்துவிட்டு, சுத்தபடுத்தி கொண்டுதான் அதன் பிறகே தொழுகைக்கு செல்ல வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. ஜமாத் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில்கூட அதை தவற விட்டுவிடுவோமோ என்று வேகமாக ஓடி எல்லாம்கூட வந்து தொழ சொல்லவில்லை, மாறாகஅமைதியாக, நிதானமாக செல்வதே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ரமலானில் கடமையான நோன்பாகட்டும், அல்லது உபரியான சுன்னத் அல்லது நபிலான நோன்புகளாகட்டும்எல்லாவற்றிற்குமே அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் நமக்கு அதிகமான சலுகைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். இஸ்லாம் அத்துனை எளிய மார்க்கமாக இருக்கும் பொழுது,தன்னை இப்படி எல்லாம் வறுத்தி கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்ப மாட்டான் என்பதுநமக்கு தெளிவாக தெரிகிறது.

நம்மால் முடிந்தவரை நமது நெருக்கமான உறவுகளுக்கும் அல்லது நம்மால் சொல்ல கூடிய, தடுக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு இது மாதிரியான செயல்களை நாம் சுட்டி காட்ட வேண்டியதுநமது கடமை ஆகும்.

அல்லாஹ் அதற்குரிய நன்மையை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு தருவான் என நம்பிக்கை கொள்வோம்.