Thursday, January 24, 2008

உலகம் அழிவதற்கு முன் ஏற்படும் பத்து அடையாளங்கள்

உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்
2. தஜ்ஜால் வருகை
3. மனிதனுடன் பேசும் பிராணி வருகை
4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
5. ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்
6. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை
7. கிழக்கே ஒரு பூகம்பம்
8. மேற்கே ஒரு பூகம்பம்
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10. எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு
இது பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை.
ஹதீஸ்

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அதற்கு
அடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர் (இவ்வாறு நன்மக்கள் மறைந்தபின் இப்பூமியில்) மட்டமான பேரீத்தம் பழத்தையும், வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்தவர்களே எஞ்சி இருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அஹ்மத், தாரமீ: மிர்தாஸ் (ரலி))
நிச்சயமாக அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஓரோடியாகப் பறித்துவிட மாட்டான் ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியைக் கைப்பற்றுவான் கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிடும். மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கி கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத்தீப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு(ப்பிறரையும்) வழிகெடுப்பார்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், தாரமி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி))

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது நிகழும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘அமானிதம் பாழடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பார்ப்பீராக! என்றார்கள், மீண்டும் அவர் அது எப்படி பாழடிக்கப்படும் என வினவ நபியவர்கள், தகுதியற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கப்படும் போது (அது பாழடிக்கப்படுகிறது)’ என்று பதிலுரைத்தார்கள். (புகாரி: அபூஹுரைரா (ரலி))
கல்வி குறைந்து விடுவதும், அறியாமை அதிகரிப்பதும், விபச்சாரம் பெருகுவதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாவதும், 50 பெண்களை ஒரு ஆண் நிர்வாகிக்கும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரிப்பதும் மறுமையின் அடையாளங்களில் உள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி))

(உங்களில்) ஹர்ஜ் அதிகமாகும் வரை மறுமை நிகழாது என நபி(ஸல்) கூறியபோது (ஹர்ஜ்) என்றால் என்ன? என நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி ஸல்) அவர்கள் அதுதான் கொலை என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா(ரலி))

நில நடுக்கம் அதிகரிக்கும், நேரங்கள் சுருங்கும், குழப்பங்கள் வெளிப்படும், கொலை பெருகும் இன்னும் சொல்வதானால் உங்களிடம் பொருட்கள் அதிகரித்து (அதையாரும் தீண்டாமல்) கொட்டிக் கிடக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி))
காலம் சுருங்கும் வரை அந்த (மறுமை) நாள் ஏற்படாது (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போல் ஆகும். ஒரு நாள் அன்று ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒருமணி நேரம் ஒர விநாடி போல் ஆகும். (திர்மிதி: ).தஜ்ஜால் வெளிப்படுவான், மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும், புகை மூட்டம் ஏற்படும், யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிப்படும். ஈஸா (அலை) இறங்கி வருவார்கள். மேற்கில் ஒரு நிலச்சரிவு, கிழக்கில் ஒரு நிலச்சரிவு, அரபு தீபகற்பத்தில் ஒரு நிலச்சரிவு ஏற்படும் கடைசியாக. எமனிலிருந்து ஒரு தீப்பிழம்பு புறப்படும் மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்க்கும், பூமியிலிருந்த பேசும் பிராணி வெளிப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி)

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றிவிடுமானால் அவற்றிற்க்கு முன்பே ஈமான் கொண்டிருந்தால் தவிர ஈமான் பயனளளிக்காது