கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால், கடவுள் நம்பிக்கைநல்லதா அல்லது கெட்டதா என்று ஒரு விவாததிற்கு வருவோம். கடவுள் நம்பிக்கை ஏற்படுத்துவதனால்நன்மைதானே தவிர, தீமை இல்லீங்க. இதை ஏன் மக்கள் ஒத்து கொள்ள மறுக்கிறார்களோ, தெரியவில்லை. சரி என்ன என்ன நன்மைகள் என்று நாம் இங்கே அலசி பார்க்கலாம்.
ஒரு வியாபாரி அல்லது தொழில் அதிபர் தன்னோட சுயநலத்திற்காக அவன் தயாரிக்கும் பொருளில்கலப்படம் செய்கிறான். கலப்படம் அல்லது போலி அல்லது இரண்டாம் தரம் என்பது குண்டு ஊசியிலிருந்து,இன்று கடைசியா கண்டு பிடித்திருக்கும் பல அறிவியல் சார்ந்த பொருள்கள் வரைக்கும் (கணினி, கைபேசி,தொலைகாட்சி பெட்டி) இப்படி எல்லா சாதனங்களிலும் போலிகள் நிறைந்து இருக்கின்றன. ஏன் அப்படிசெய்கிறான் என்று பார்த்தால், அவனுடைய குறிக்கோள் காசு மட்டும்தான், எதை பற்றியும் அவனுக்குபயமும் இல்லை மற்றும் கவலையும் இல்லை.
அப்படி தயாரிக்கும் பொருட்களால் பாதிக்கபடுவது பொது மக்கள்தான். வைத்தியத்திற்காக மருத்துவமனைசென்றால் அங்கேயும் போலி மருத்துவர்கள் அல்லது போலி மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை, சம்மந்தமே இல்லாமல் உடலை கிழிக்கும் அல்லது அறுக்கும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. குழந்தைகளுக்குவாங்கும் பால் பவுடரிலும்கூட கலப்படம், இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி குன்றி, மரணிக்கும்குழந்தைகளும் ஏராளம். இந்த உலகில் மனிதன் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரைக்கும் நல்லபடியாக வாழவேண்டுமா? இல்லையா?
இந்த உலகில் எது நிஜம்? எது பொய்? யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? இப்படி பல கேள்விகள் எழும் சூழ்நிலைதான் உருவாகி இருக்கிறது. பெற்றெடுக்கும் தாய் அவள் வழி தவறியதால் (கள்ள காதல்),கணவன் மற்றும் பிள்ளைகளை கொல்லும் சூழ்நிலை ஒரு பக்கம், குடும்ப தலைவன் வட்டிக்கு கடன் வாங்கி அதைஅடைக்க முடியாமல் மனைவி மற்றும் பிள்ளைகளோடு தற்கொலைகள் ஒரு பக்கம், போதை மருந்துக்குஅடிமையாகி, தன் உடல் நலன்களை கெடுத்து கொள்ளும் பிள்ளைகள் ஒரு பக்கம், கல்யாணத்திற்கு முன்னால்உடலுறவுகள், கரு உண்டாகுதல், கலைத்தல், அவமானத்தில் தற்கொலைகள், பால்வினை நோய்களால் அழிவுஎன்று பலவாறு மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் வேறு கதைகளும் உண்டு. சாதி விட்டு சாதி காதல் திருமணம், இதனால் குடும்ப பிரிவு, பகைமை,சொத்துக்காக அண்ணன் - தம்பி வெட்டு, குத்து, இந்த தெருவில் நான் ரவுடி, இந்த இடத்திற்கு நானே தலைவன்,நானே தாதா என்று சொல்லி கொண்டு கொலைகாரர்கள் ஒரு பக்கம், வழிப்பறி, திருட்டு, கற்பழிப்பு என்றுஏராளமான தவறுகள் நம்மை சுற்றி நடந்து வருகின்றன. நாம் தினமும் ஒரு செய்தியாக அதை பார்த்துவருகிறோம் என்பதும் உண்மை. மனிதன் உணர்ச்சி வசபட்டு செய்யும் தவறுகள் மிகவும் சொற்பமாகதான் இருக்கும்.ஆனால் திட்டம் போட்டு போட்டு செய்யும் தவறுகள்தான் அதிகம்.
வரதட்சனை கொடுமை இது எல்லா மதங்களிலுமே இருக்கும் பெரிய பிரச்சினை. ஸ்டவ் வெடித்து மருமகள் மரணம். வாழ வெட்டியாக வீட்டுக்கு அனுப்பும் மருமகள், மாமியாரைவெளியேற்றும் மருமகள், இது போல பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை துரத்தும் ஓர் அவலம். இன்னும் முதியோர் இல்லம். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.சிறுவர் காப்பகம், அநாதை இல்லம். அரசு தொட்டில் திட்டம், இதெல்லாம் ஏன்?
மனிதனுக்கு தான் உடுத்தும் உடை அல்லது ஆடை எதற்காக? தன் உடலில் இருக்கும் அங்கங்களைமறைப்பதற்காக, தனது மானத்தை மறைப்பதற்காக அப்படிதானே நாம் விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால் இன்று பேஷன் ஷோ என்ற பெயரில் உடைகளை குறைத்து மங்கையர்கள் நடந்து வருவதும், இன்னும்தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமாக்களில் மற்றும் ஆங்கில மொழி திரைபடங்களிலும் வரும் ஆபாச உடைமற்றும் காட்சிகள். அதற்கு மக்கள் மதிப்பீடு கொடுப்பதும், இன்னும் அதை நாகரீகம் என்றும்தானே சொல்கிறார்கள். இன்னும் சில தமிழ்நாட்டுகுடும்ப பெண்கள் அந்த அளவுக்கு மோசம் போகவில்லை என்றாலும், நமது தமிழ்நாட்டிலும்அரை குறை ஆபாச ஆடைகள் வந்துவிட்டதா அல்லது இல்லையா?
ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் உடை என்பதே இல்லாமல் நிர்வாணமாககடலில் (பொது இடத்தில்) குளிக்கும் காட்சிகளை இன்று தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்கின்றனர். 5 வயது பிள்ளையிலிருந்து 80 வயது முதியவர்வரை உடலில் ஒரு ஒட்டு துணிகூட இல்லாமல் கடலில்குளிக்கிறார்கள். இவர்கள் முழுவதும் இயற்கையாக குளிக்கிறார்களாம், வாழ்கிறார்களாம். இது என்னகொடுமையோ? ஏன் மக்கள் அந்த அளவுக்கு மானம் கெட்டு போய்விட்டார்கள். இனி வரும் காலங்களில்உடை உடலில் அதிகம் இருந்தால் அதுதான் அநாகரீகம் என்றுகூட சொல்வார்கள். இப்போவே அப்படிதான்என்று நினைக்கின்றேன்.
இன்று கடவுள் பெயரை சொல்லி எத்தனை சாமியார்கள், பாதிரியார்கள், மத குருமார்கள் பெண்களின்வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் எல்லா மதங்களிலும் இருந்தாலும்கூடசாமியார்கள் என்பது கூடுதலாக இருப்பதையும் நாம் காணலாம். "அரசன் அன்றே கொள்வான்" , "தெய்வம்நின்றே கொல்லும்" இதை ஏன் மக்கள் உணர மறுகின்றனர். இறந்து போன எவருக்கும் உங்களது பிரார்த்தனைகாதில் விழுவதில்லை. இறந்தவர் எவரும் உயிரோடு அல்லது ஆவி, பேயாககூட வர மாட்டார். ஜோசியம், ஜாதகம் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தை கணக்கிட்டு ஒரு யூகமாக ஒரு கருத்தை சொல்வார்கள்.அதில் சில நடப்பதும் உண்டு, ஆனால் அதை பின்பற்றாமல் இருப்பதே நல்லது. ஜோசியம் பார்க்கிறவர்,அவருடைய வாழ்க்கை அல்லது தலையெழுத்தையே அவரால் நிர்ணயிக்க முடியாது, அதுவும் நமக்குதெரிந்த விசயம்தான்.
இப்படி தப்பு செய்பவர்கள் எல்லாரும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், அல்லது கடவுள் இருந்தால் வணங்கிட்டு, நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஏனெனில் ஒருவன் தவறை செய்யும்போது, எதற்காகவும் பயப்படுவதில்லை, காவல்துறை, சட்டம், எந்த ஒரு பதவியில் இருக்கும் மனிதர் என்று எதற்காகவும் பயப்படுவதில்லை. ஏனெனில் நாமும் மனிதன்.நம்மை கட்டுபடுத்துபவர்களும் மனிதன் என்ற நிலையில், நான் ஏன் கட்டுபடனும் என்று இன்று குற்றங்கள்அதிகம் அதிகம் பெருகி இருக்கின்றன. ஆனால் கடவுள் என்பவர் இருக்கிறார், அவர் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார் என்ற பயம் எல்லா மக்களுக்கும் ஏற்படனும். கடவுள் நம்மை தண்டிப்பார், இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் மறுமையில் தண்டிப்பார், நாம் இறந்த பிறகு நம்மை அவர் உயிர்தெழுவ செய்வார்என்று நம்பிக்கை கொள்ளலாம். அப்படி நம்பிக்கை கொள்வதால் இந்த உலகில் நாம் எதை இழக்கிறோம்?எதையும் இழப்பது இல்லை, தவறான அல்லது கெடுதலான ஒன்றை தவிர, இந்த உலகிலும் நாம் ஒழுக்கமானவர்களாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம்.
கடவுளுக்காக நாம் உலகில் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி வாழனும். ஒருவருக்கொருவர் உதவி செய்துவாழனும். காசு-பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. உணர்வுகள் நிறைந்தது வாழ்க்கை. எல்லாரும் ஒரு தாய்-தந்தை வழி பிறந்தவர்கள். வேறு நாடு அல்லது வேறு மதம் எதிலிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்கள்.எல்லோரும் நமது கூட பிறந்த சகோதர மற்றும் சகோதரிகள். எல்லோரும் நமது இரத்த பந்தங்கள்.யாரையும் யாரும் ஏமாற்ற கூடாது, தவறு இழைத்துவிட கூடாது. இதுபோன்ற எண்ணங்கள் வளர்ந்தால் எப்படி இருக்கும்? இந்த உலகம் நல்ல நிலையில் இயங்கும்.