அன்பு நண்பர்களே! எனது கடவுள் நம்பிக்கை இழைகளை நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படிபடிக்காவிட்டால் இனிமேலாவது அதை சென்று படியுங்கள். எனது தோழமைகள் சொன்ன சில கருத்துகளை அல்லது கேள்விகளை உங்களுக்கு சொல்லிவிட்டு, அதற்கான காரணங்களையும் சொல்ல ஆசைபடுகிறேன்.
எல்லோரும் ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் இந்த உலகில் நீங்கள் மட்டும் ஏன் பிடிவாதமாக இறைவன், மதம் என்று இப்படி பேசி கொண்டே இருக்கிறீர்கள். எல்லோருடமும் ஒத்து போகாமல் நீங்கள் மட்டும் எல்லோருக்கும் எதிராக சண்டை இட்டு கொண்டும், உங்களுக்கு என்று ஒரு தனி கருத்துகளையும் சொல்லி வருகிறீர்கள். இதனால் பல அன்பர்களின் வெறுப்பையும் சம்பாரிக்கிறீர்கள். உலகம் எப்படி போனால் உங்களுக்கு என்ன? இருக்கும்வரை இன்பமாக வாழ்ந்துவிட்டு போக வேண்டியதானே? யாரும் யாரையும்மாற்ற முடியாது. யாரும் யார் சொல்வதையும் கேட்கவும் மாட்டார்கள்.
இது போன்ற சில கருத்துக்கள் எனது தோழமைகளிடமிருந்து அப்போ அப்போ வருவதுண்டு. சரி நான்ஏன் இப்படி இருக்கிறேன் என்ற காரணத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடவுள் இருக்கிறார் அல்லது ஏதோ ஒரு சூப்பர் பவர் அல்லது மிக பெரிய சக்தி நமக்கு மேலே இருக்கிறது.அதுதான் இந்த உலகை படைத்து, பரிபக்குவ படுத்தி கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை இந்த உலகில் இருக்கும் முக்கால்வாசி மேல் உள்ளவர்களுக்கு உண்டு. ஒரு சில நபர்கள் மட்டும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகஇருக்கிறார்கள், அவர்களை பற்றி நான் இந்த பதிவில் ஏதும் சொல்ல விரும்பவில்லை.
நான் இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்திருக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த காரணத்தினால்தான் நான்இஸ்லாத்தை பற்றி பிடித்து கொண்டு, எனது மார்க்கம்தான் சரி, எனது கடவுள்தான் சரி என்று சொல்லும் ஒரு சாதாரணமனிதனின் பட்டியலில் நான் இல்லை. எனது வாழ்வில், எனக்கென்று உலக விவரம் தெரியும் பொழுது,அதாவது எனது பள்ளி படிப்பை முடிக்கும் நாட்களில் கடவுள் பற்றிய விவாதங்களில், கடவுள் இல்லை என்றுவாதாடிய நபர்களில் நானும் ஒருவன். அப்பொழுதெல்லாம் அதிகமாகவே விவாதிப்பேன், எனக்கு இருக்கும் கொஞ்சம் பேச்சு திறமையால் கடவுள் இல்லை என்ற முடிவையே மற்றவர்களும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையில் விவாதம் புரிந்து வந்தேன்.
சரி அன்று அப்படி விவாதம் புரிந்த இவனுக்கு இன்று என்ன நேர்ந்தது? கடவுள் ஏதும் நேரில் வந்து ஏதும்சொன்னாரா? இல்லை மிக பெரிய வரம் அல்லது அருள் புரிந்து விட்டாரா? இப்படி ஏதும் கேள்விகள் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படி எல்லாம் ஏதும் நடக்கவில்லை. இந்த உலகை பற்றி அதிகமாகசிந்தித்தேன். எனக்கு கிடைத்த படிப்பினைகளை பற்றி ஆராய்ந்து (பகுத்தறிந்து), இந்த மார்க்கத்தை மனதளவில்முழுமையாக ஏற்று கொண்டிருக்கிறேன்.
இஸ்லாம் என்ன சொல்கிறது?
இஸ்லாம் மரணத்திற்கு பிறகு ஒரு நிலையான அழியாத ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறது. இன்னும்இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்கள் மட்டும்தான் அந்த சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் சொல்கிறது.மரணித்த எவரும் உயிர்பித்து வந்து ஏதும் சொல்ல மாட்டார்கள் அல்லது ஏதும் சொல்ல முடியாது என்றுஇஸ்லாம் சொல்கிறது. இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வை இதுவரை எவரும் கண்டது இல்லை, ஆதலால்அந்த ஓர் இறைவனுக்கு உருவத்தை எவராலும் கொடுக்க முடியாது என்று சொல்கிறது. ஒரே இறைவன்என்று அழுத்தமாக சொல்கிறது. இறைவன் இல்லாத எந்த ஒன்றிலும் எந்த ஒரு சக்தியும் இல்லை என்றுசொல்கிறது. இன்னும் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இந்த மண்ணில் பிறந்த மனிதர்களையே தனது தூதர்களாக வழி அனுப்பி, மனிதர்களுக்கு நல் உபதேசம் செய்து இருக்கிறது. இன்னும் இறைவனுக்கும்,இறை தூதர்களுக்கும் இடையில் வானவர்கள் தூதுவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும்சொல்கிறது. இன்னும் ஒரு சில இறை தூதர்கள் இறைவனிடம் பேசியும் இருக்கிறார்கள் என்ற செய்தியையும்இஸ்லாம் சொல்கிறது. இவை எல்லாம் எனது அறிவுக்கு முழுவதுமாக ஒத்து போக கூடிய கருத்தாக இருப்பதனால் நான் இஸ்லாத்தை முழுவதுமாக ஏற்று கொண்டேன்.
நான் கற்ற பாடத்தை எல்லோருக்கும் சொல்ல வேண்டியதும் எனது கடமைகளில் ஒன்று. என்னிடம் பழகும்எனது சக உடன் பிறப்புகளும், அவர்களும் நாளை (மறுமையில்) நரகத்தில் சென்று சிக்கிவிட கூடாது.அவர்களும் மறுமையில் சொர்கத்தை அடைய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் மட்டுமே.என்னதான் உண்மைகளை நாங்கள் சொல்லி வந்தாலும், வேதம், வரலாறு என்று காட்டினாலும், இறைவன் நாடினால் மட்டுமே ஒருவர் இஸ்லாத்தை ஏற்க முடியும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தனது திருமறையில் ஒரு செய்தியையும் சொல்லி காட்டுகிறான். ஏகத்துவம் என்ற இந்த இஸ்லாத்தைபற்றி சொல்வது மட்டுமே இஸ்லாமியர்களின் கடமை. அதன் பிறகு ஒருவர் ஏற்பதும், ஏற்காமல் போவதும்அது அந்த இறைவனை சார்ந்தது மட்டுமே!
ஏகத்துவ பணி என்பது ஒரு சிறந்த பணி ஆகும். இவற்றை சொல்வதனால் இறைவனிடத்தில் ஒரு நல்ல நெருக்கம் ஏற்படுமேதவிர, நன்மைகள் அதிகம் கிடைக்குமே தவிர, தவறுகள் ஏதும் நடக்க வாய்ப்பில்லை.இறைவனை பற்றிய சிந்தனையிலும், இறைவனின் மகிமை பற்றியும், இன்னும் இஸ்லாமிய நல் ஒழுக்ககங்களைபிறருக்கு சொல்லி காட்டுவதில் நன்மைகள் அதிகம் கிடைக்குமே தவிர தீமைகள் ஏதும் இல்லை.
நல்ல கருத்துகளை, உபதேசங்களை கேட்க மறுக்கும் மனிதர்கள், அவர்களுக்கென்று ஒரு நேரம் வருகையில்அதாவது இறைவனின் நாட்டத்தை அடையும் பொழுது, கண்டிப்பாக எல்லா கருத்துகளையும் ஏற்க கூடியவர்களாகஅவர்கள் ஆவார்கள். அதுவரை தனது பணியை ஒவ்வொருவரும் செய்து வருவதே மிகச் சிறந்த வழியாகநான் கருதுகிறேன்.