கடவுள் நம்பிக்கை ஏன்?
கடவுளை பற்றி முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
படைப்பினங்களில் சிறந்த படைப்பாக மனிதன் இருக்கிறான். மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் அறிவான, ஆறாவதுஅறிவை இறைவன் தந்திருக்கிறான். நல்லது எது? கெட்டது எது? என்று மனிதனால் பகுத்து அறிய கூடியஅறிவை இறைவன் தந்திருக்கிறான். இதை வேற மாதிரியாக சொல்ல வேண்டும் என்றால், கல், மண், காற்று, மரம்,செடி, விலங்குகள் இவற்றைவிட ஒரு படி மேலே மனிதன் இருக்கிறான். அப்போ மனிதனுக்கு மேலே என்னவென்றுகேட்டால் அதுதான் இறைவன். இறைவன் எத்தனை படி உயரம் என்று கேட்டால், அதற்கு நம்மிடம் விடை கிடையாது. எண்ணிக்கையில் வரையறுத்து சொல்லிவிட முடியாது, அவன் எத்தனை படி உயர்ந்தவன் என்று. முடிவற்ற எண்ணிக்கையின் படி உயர்ந்தவனே இறைவன்.
ஒரீரு குழந்தைகளை பராமரிப்பது பெற்றோர், 50 மாணவர்களை பராமரிப்பது ஒரு ஆசிரியர். 50 ஆசிரியர்களைநிர்வகிப்பது ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி நிர்வாகம். 50 கல்லூரிகளை நிர்வகிப்பது ஒரு பல்கலை கழகம்.50 பல்கலை கழகங்களை நிர்வகிப்பது ஒரு தலைமை அல்லது ஒரு அரசு அல்லது ஒரு மாநிலம். மாநிலங்களை நிர்வகிப்பதுமத்திய அரசு. ஒரு நாட்டிற்கு ஒரு அரசு. பல நாடுகளை பாதுகாப்பது ஒரு ஐநா சபை.(மனிதர்கள் மத்தியில் இந்த எல்லை முடிவடைந்து விட்டது) ஆக இறுதியாக ஐநா சபையில் சென்று நான்நிறுத்திவிட்டேன். அப்போ அந்த இந்த உலகம் முழுவதையும் பராமரிப்பது, பாதுகாப்பது யார்? அவர்தான் இறைவன்.
5 அறிவு ஜீவிகளுக்கும், 6 அறிவு ஜீவிகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? 6 அறிவு படைத்த மனிதன் விலங்கினங்களை போன்றே பார்கிறான், செவியுறுகிறான், முகர்கிறான், சாப்பிடுகிறான் பெரும்பாலும் எல்லாவற்றையுமே செய்கிறான். இன்னும் கூடுதலாக சிந்திக்கிறான், தனது சிந்தனை திறமையினால் புதுசு புதுசாக பல பொருட்களை கண்டு பிடிக்கிறான். மனிதன் கண்டுபிடிக்கும் பொருட்களை பற்றி சற்று சிந்தித்துபாருங்கள். மனிதன் என்ன செய்கிறான் இருக்கும் ஒரு பொருளை வைத்து அதையே உரு மாற்றி, உரு மாற்றி அதிலிருந்து புதிதாய் ஒன்றை கண்டுபிடிக்கிறான். இன்னும் இருக்கும் பல இயற்கை அற்புதங்களை கண்டுபிடித்து வெளியில் சொல்கிறான். இதுதான் மனிதனால் முடியும், இது மட்டுமே முடியும்.
மனிதனையே படைத்தவன்தான் இறைவன். மனிதனுக்கு 6 அறிவு என்றால், இறைவனுக்கு கோடான கோடி அறிவுகள் என்று நினைவில் நிறுத்தி கொண்டு, இப்பொழுது சிந்தித்து பாருங்கள். மனிதனே இத்தனை இத்தனைகண்டுபிடிப்புகளையும், அற்புதங்களையும் நடத்தி சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறானே, மனிதனை படைத்தஇறைவன் என்னவெல்லாம் செய்வான் !!!!!!!!!!
இறைவனுக்கு ஒரு புதிய பொருளை உருவாக்குவதற்கு எந்த ஒரு பழைய பொருளும் தேவை இல்லை. ஒரு புதிய படைப்பை படைப்பதற்கு ஒரு வார்த்தை அல்லது ஒரு சொல் சொன்னால் போதும். அந்த பொருள்குறைபாடு இல்லாத சிறப்பான ஒன்றாக ஆகிவிடும். இயற்கை இயற்கை என்று சொல்லும் இந்த உலகை இப்பொழுது சிந்தித்து பாருங்கள்.
வானம், பூமி, நட்சத்திரங்கள், கோள்கள், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம், மரம், செடிகள், காய்கள், கனிகள்,கடல், முத்து, பவளம், தங்கம், வைரம், பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள்.
இது கடவுளை பற்றிய ஒரு சிறு பாடம். கடவுள் நம்பிக்கை இல்லாதோர் இதை படித்து, சிந்தித்து கடவுள்இருக்கிறார் என்று ஏற்று கொண்டால், அதற்கு காரண கர்த்தாவும் அந்த ஓர் இறைவனே !
(தொடரும்)
அன்புடன்
மீரான்