Saturday, January 12, 2008

கடவுள் நம்பிக்கை (3)

எனது முந்தைய பதிவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நிலையை பற்றி சொல்லி இருந்தேன்.அது பல வகைகளில் ஒரு வகைதான். ஆனால் அதுதான் பெரும்பான்மையான மக்களின் நிலையும்கூட. இன்னும் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், என்ன என்ன செய்கிறார்கள் என்று இந்த பதிவில்நாம் காண்போம்.

அதற்கு முன்னதாக நான் இட்ட இரண்டு பதிவுகளும், நான் நேசித்த ஒரு தமிழ் குழுமத்தில் இட்டிருந்தேன். முதல் பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பதிவில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. இரண்டாம்பதிவிற்கு மேல் என்னை அந்த குழுமத்தில் தொடர அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. என்னைசுதந்திரமாக எழுத மறுத்த அந்த குழுமத்தில் நான் ஏதும் எழுத வேண்டாம் என்ற முடிவும் எடுத்திருக்கிறேன்.உண்மை கசக்கவே செய்யும் அவர்களுக்கு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து வருகிறேன்.

இன்னும் இஸ்லாமிய சமுதாயம் வளர்கிறதை, எந்த ஒரு நபரும் விரும்புவது இல்லை. இவர்கள் யார்என்றால் இஸ்லாம் அல்லாத கடவுள் நம்பிக்கை உடைய பிற மதத்தவரும் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஆவார்கள். இஸ்லாமிய சமுதாயம் (மக்கள்) மற்ற சமுதாயத்தினரைவிட 50 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இந்திய சுதந்திர போராட்டாத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மிக பெரிதாய் இருந்திருக்கிறது. இன்னும் இந்தியவரலாற்றில் சுமார் 800 ஆண்டு காலம் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். குறிப்பாக சொன்னால் மன்னர் ஆட்சியில் ஒளரங்கசீப் அவர்களின் ஆட்சியும் இஸ்லாமிய ரீதியில், அதாவது சகோதரதத்துவமாகவும்,நல மத நல்லிணக்கமாகவும் ஆட்சி புரிந்திருக்கிறார். ஆனால் இன்றைய வரலாற்றில் மறைக்கபட்ட செய்திகள் ஏராளம். இன்னும் தவறான செய்திகளை மிகவும் அழகாக வரலாற்றில் உட் புகுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

நமது இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளி படிப்பை முழுவதும் முடித்த ஆண்கள் ஆயிரத்தில் ஒருவராக இருக்கும். பெண் என்பவள் எங்கே படித்திருப்பாள், எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் ஆச்சரியம். இதற்கு காரணம்என்ன? இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால்,இஸ்லாமியர்கள், ஆங்கிலேயர் வைத்திருந்த பள்ளி கல்வி அத்தனையும் எதிர்த்தார்கள். பள்ளி, கல்லூரி என்று படித்து கொண்டிருந்த இஸ்லாமிய இளைஞர்களும் அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியில் வந்தார்கள். ஆங்கிலேயரின் கல்வியை படிப்பது ஹராம், படிப்பது பாவம் என்று மக்களுக்கு பொய் பிரச்சாரம் செய்தார்கள்.ஆனால் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் எந்த கல்வியையும், யாருக்காகவும் விட்டு கொடுக்கவில்லை. இஸ்லாமிய மக்கள் தான் செய்வது தவறு என்று தெரியாமல், தம் தலையில் தாங்களேமண்ணை வாரி இறைத்துக் கொண்டார்கள். அதன் விளைவால் இன்று கல்வி அறிவில்லாத எத்தனையோ ஏழை மக்கள் வீடுகளில் பீடி சுற்றி பிழைப்பதும், ஊது பத்தி , மெழுகுவர்த்தி தொழிலும் தங்களை வறுத்திகொண்டிருக்கின்றனர். இன்னும் என்ன செய்வதென்று தெரியாமலேயே வாழும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சமுதாய மக்களும் இந்த இஸ்லாமிய மக்களே என்பதும் உண்மை.

இன்னும் சில குடும்பங்களில், ஆண் பிள்ளைகள் வெளிநாடு செல்வதும், அங்கேயும் கூலி தொழிலில் ஈடுபட்டு,தனது வாயை கட்டி, வயிற்றை கட்டி, இன்னும் அந்த நாட்டில் ஒரு அடிமைகளாக மிகவும் கஷ்டபட்டு, தனது குடும்ப வாழ்வை தியாகம் செய்து, தமது பெற்றோர், மனைவி, குழந்தைகளையும் காப்பாற்றி வரும்வதும் அதிகம் அதிகம் இந்த இஸ்லாமிய குடும்பத்தில்தான் என்பதும் குறிப்பிடதக்கது.

(தொடரும்)